ஐ ட்யூனில் முதலிடத்தைப் பிடித்த யாக்கை’ படப்பாடல்

கிருஷ்ணா, சுவாதி ரெட்டி இணைந்து நடிக்க, குழந்தை வேலப்பன் இயக்கும் படம் ”யாக்கை” .

இந்தப் படத்துக்காக யுவன் இசையில் உருவான, ”நீ…” என்று துவங்கும் ஒரு பாடல் சிங்கிள் டிராக் ஆக, பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியானது .

வெளியான வேகத்தில் ஐ ட்யூன் அட்டவணையில் உச்சம் தொட்டிருக்கும் இந்தப் பாடல், யூ டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் அட்டகாசமாக டிரெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறது.

ஆம்! பாடல் வெளியாகி சில நாட்களே ஆன நிலையில் வியப்பான வேகத்தில் இந்தப் பாடல் பிரபலமாகி இருப்பதோடு, சமூக வலைதளங்களில் ‘நீங்கள் திரையில் பார்க்க விரும்பும் பாடல் எது? என்ற வாக்கெடுப்பில் முதல் இடத்துக்கும் வந்திருக்கிறது .

இயக்குனர் கவுதம் மேனனும் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பாடலை மேற்கோள் காட்டி yuvan is back என்று ட்வீட் செய்துள்ளார் .

ஐ டியூன் தமிழ் அட்டவணையில் முதல் இடத்துக்கு வந்தது மட்டுமல்லாமல் அதற்குள் யூ டியூபில் ஒரு லட்சம் பேரால் பாரக்கப்பட்டு உள்ளது இந்த பாடல் .

Yakkai Movie Newsyuvan shankar raja
Comments (0)
Add Comment