என்னங்க சார் உங்க சட்டம்! தமிழில் வெளியாகும் Duplex படம்!

Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கும் “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் ஜெயம் ரவி வெளியிட அது ரசிகர்களிடம் பெரும் வரவேர்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் மூன்று புதிய போஸ்டர்களும் படத்தின் கதையின் மையத்தை கூறி பெரும் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த மூன்று புதிய போஸ்டர்களும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டத்தை போற்றும்படி அமைந்துள்ளது.இப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு படம் எப்படி இருக்குமென்கிற பெரும் ஆர்வத்தை மக்களிடையே தூண்டியுள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தினை தமிழில் ஒரு புதியதாக “ Duplex “ என்ற வகையின் உருவாகும் படம் என்று கூறியுள்ளனர்.

Actor KarthiikRSActress AyraaActress Rohini MolletiActress Soundarya Bala Nandakumardirector Prabhu JeyaramYennangaSirUngaSattam movie