மீண்டும் விஜய் படத்தில் யோகிபாபு – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கப் போகும் 63-வது படத்தை அட்லீ இயக்கப் போகிறார்.

‘மெர்சல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கும் இந்த வெற்றிக் கூட்டணியின் புதுப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை என்றாலும் நடிகர், நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ‘சர்கார்’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த காமெடி நடிகர் யோகிபாபு மீண்டும் இப்படத்தில் அவரோடு இணைந்து நடிக்கிறாராம்.

ஒரு படத்தில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் சம்பளம் வாங்கி வந்த யோகிபாபு சமீபத்தில் தான் அதை 3 லட்சமாக உயர்த்தினார். தற்போது 25 நாட்கள் கால்ஷீட்டுக்கு 80 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார்.

அவர் கேட்ட சம்பளத்தை உடனே கொடுக்க ஒப்புக்கொண்ட டைரக்டர் அட்லீ கூப்பிடுகிற நேரத்துக்கு வந்து நடித்துக் கொடுத்து விட்டுப் போக வேண்டும் என்று ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டாராம். அதற்கும் ஓ.கே சொல்லி விட்டார் யோகிபாபு.

vijayVijay 63Yogi Babu
Comments (0)
Add Comment