‘எங் மங் சங்’ படத்துக்காக சீனாவில் சண்டை போட்ட பிரபுதேவா

‘எங் மங் சங்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பிரபுதேவா.

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

புதுமுக இயக்குனர் அர்ஜுன் எம்.எஸ் தான் படத்தின் இயக்குனர்.

கும்பகோணம், பொள்ளாச்சி, ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்த படக்குழுவினர்
சமீபத்தில் இப்படத்துக்காக சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் வில்லன்களுடன் பிரபுதேவா மோதும் சண்டைக் காட்சிகள் படமாக்கி விட்டு திரும்பியிருக்கிறார்கள்.

குங்பூ மற்றும் சைனீஸ் ஸ்டண்ட் பற்றிய காட்சிகள் கொண்ட படம் என்பதால், அதிக சிரத்தை எடுத்து சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறாராம் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா.

1980 கால கட்டத்தில் நடப்பது மாதிரியான கதைக்களத்தைக் கொண்ட படமாக ‘எங் மங் சங்’ தயாராகிக் கொண்டிருக்கிறது.

Lakshmi MenonMovie NewsPrabhu DevaYung Mung Sung
Comments (0)
Add Comment