லட்சுமி மேனனுக்காக ‘பாகுபலி’ வில்லனுடன் மோதிய பிரபுதேவா!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘எங் மங் சங்’ என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் லட்சுமி மேனன்.

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ்.சிவராமன் தயாரித்து வரும் இப்படத்தில் பிரபுதேவா, லட்சுமிமேனன் உடன் தங்கர் பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின், காளி வெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ‘பாகுபலி’ வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அர்ஜுன்.எம்.எஸ்

படத்தைப் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, ”இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்தது. சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா ‘பாகுபலி’ வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப்பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது. பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். சண்டைகளை கற்று கொடுக்கும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக ‘பாகுபலி’ வில்லன் பிரபாகர் நடிக்கிறார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களின் கொண்டாட்ட படமாக ‘எங் மங் சங்’ இருக்கும்” என்றார்.

Lakshmi MenonMovie NewsPrabhu DevaYung Mung Sung
Comments (0)
Add Comment