யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்து : ரசிகர்களுக்கு வேண்டுகோள்

YAARS மீடியா நெட் வொர்க் என்கிற நிறுவனம் மூலம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ‘ Voice of Yuvan’ என்ற இசை நிகழ்ச்சி வருகிற ஜனவரி 23ஆம் தேதி கோவையிலும், ஜனவரி 26 ஆம் தேதி மதுரையிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இசை ரசிகர்களும் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர்.

தேதி நெருங்கி விட்ட நிலையில், யுவனின் இசை நிகழ்ச்சியை திடீரென்று ரத்து செய்துள்ளனர்.

இதுகுறித்து YAARS மீடியா நெட் வொர்க் நிறுவனம் கூறியிருப்பதாவது :

YAARS மீடியா நெட் வொர்க் என்கிற எங்கள் நிறுவனம் மூலம் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ‘ Voice of Yuvan’ இசை நிகழ்ச்சியை கோவை மாநகரில் ஜனவரி 23ஆம் தேதியும், மதுரையில் ஜனவரி 26 ஆம் தேதியும் நடத்த இருந்தோம்.

அதே தேதிகளில் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சியும் அங்கே நடக்க இருப்பதால் யுவனின் இசை நிகழ்ச்சி மற்றுமொரு தேதியில் நடக்க உள்ளது,தேதி முடிவான பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த நிகழ்சிக்காக ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தவர்களின் ஏமாற்றத்தை நாங்கள் அறிவோம்.
ஏற்கனவே அனுமதி சீட்டு வாங்கிய ரசிகர்களின் பணமும் திருப்பித் தரப்படும். ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்துக்கு நாங்கள் வருந்துகிறோம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

A.R.RahmanVoice Of Yuvanyuvan shankar raja
Comments (0)
Add Comment