டிஎஸ்கே நாயகனாக நடிக்கும் ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ !

மூவி ஸ்க்ரோல் சார்பில் SD.சோமு தேவ் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ (He is pregnant). ஷங்கர் நாகதேவன் இயக்கியுள்ள இந்த வெப் தொடரில் விஜய் டிவி புகழ் நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
ரஞ்சனா கதாநாயகி நடிக்க, தீபா சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சந்துரு, வசந்த், சிரில், வேலு, பவி, மணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விஷ்ணுமணி வடிவு ஒளிப்பதிவு செய்ய, வசந்த் தருண் இசையமைத்துள்ளார்.. படத்தொகுப்பை இயக்குநர் ஷங்கர் நாகதேவனே மேற்கொண்டுள்ளார்.சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பையும் ஆச்சர்யத்தையும் பெற்றுள்ளது..
இயக்குநர் சங்கர் நாகதேவன் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். இவர் இயக்கிய ‘அவள் பெயர் ஐட்டம்; என்கிற குறும்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது.யூ ட்யூப்பிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப் தொடரை இயக்கியுள்ளார்.
மூவி ஸ்க்ரோல் (Movie Scroll) யூடியூப் தளத்தில் இது ஒளிபரப்பாக இருக்கிறது. வரும் பிப்ரவரி-14 காதலர் தினத்தன்று இதன் முதல் எபிசோடை வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து வாராவாரம் ஒரு எபிசோட் வெளியாக இருக்கிறது.