‘மாவீரன்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகை சரிதா பேச்சு!
சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியானது. இந்த நிலையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நடிகை சரிதாபேசியதாவது,
“இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்த்ததுதான். இதன் வெற்றி என்னுடைய முதல் படம் வெற்றி போல தான். அப்பொழுது என்னால் அந்த வெற்றியை உணர முடியவில்லை. ஆனால், இப்பொழுது பார்வையாளர்களின் ரெஸ்பான்ஸ் பார்க்கும் பொழுது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. நான் படத்தை நான்கு முறை பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறையும் அனைவரும் படத்தை என்ஜாய் செய்து பார்க்கிறார்கள். அருண், அஸ்வின், சிவா மற்றும் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி. நான் இந்த படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன்”.