அல்லு அர்ஜூனின் சினிமா பயணத்தில் மற்றொரு மைல்கல்’புஷ்பா 2′!

Get real time updates directly on you device, subscribe now.

ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். இந்த எபிக் கதாபாத்திரம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாததாக மாறி உள்ளது. ‘புஷ்பா 2’ திரைப்படம் ரூ. 1800 கோடி பாக்ஸ் ஆபீஸில் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் இந்தி வெர்ஷன் சமீபத்தில் தொலைக்காட்சியில் பிரீமியர் ஆனது.

நடிகர் அல்லு அர்ஜூனின் இந்த மாஸிவ் கதாபாத்திரத்தை இந்தி பேசும் ரசிகர்களும் கொண்டாடினர். இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘புஷ்பா2’ திரைப்படம், 5.1 TVR ரேட்டிங் மற்றும் 5.4 கோடி பார்வைகளைப் பெற்று, இந்த வருடத்தின் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ‘ஸ்ட்ரீ 2’, ‘பதான்’, ‘அனிமல்’ மற்றும் பல பிளாக் பஸ்டர் படங்களின் ரெக்கார்டையும் இது உடைத்துள்ளது.

Related Posts
1 of 7

இந்த நம்பரையும் தாண்டி, படத்தின் எமோஷனல் தருணங்கள்தான் ஆடியன்ஸை கனெக்ட் செய்திருக்கிறது. பாலிவுட் ஜெயண்ட்ஸை தாண்டி புஷ்பா ராஜாக அல்லு அர்ஜூனை பெரிய திரையிலும் சின்னத்திரையிலும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த சாதனை நடிகர் அல்லு அர்ஜூனின் சினிமா பயணத்தில் மற்றொரு மைல்கல். தேசிய விருது பெற்றதில் இருந்து பான் இந்தியா ஸ்டாராக உருவானது என தன்னுடைய ஒவ்வொரு வெற்றியிலும் அடுத்தடுத்து உயரத்தை அடைந்து வருகிறார் நடிகர் அல்லு அர்ஜூன்.