“ரிப்பப்பரி” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !

AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வித்தியாசமான கருவில், ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”. ஏப்ரல் 14 அன்று திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வினில் மாஸ்டர் மகேந்திரன் பேசியதாவது…
இந்த பங்ஷனுக்கு வந்த பிறகு தான் நிறைய டேலண்ட் உள்ளவர்கள் படத்தில் வேலை பார்த்துள்ளார்கள் எனத் தெரிந்துகொண்டேன். அவர்களின் மற்ற திறமைகள் இங்கே பார்த்தபோது, வியப்பாக இருந்தது. இந்தப்படத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சொல்லவேண்டும். தொழில்நுட்ப குழுவில், அத்தனை பேரும் கடினமாக உழைத்துள்ளார்கள். சகோதரர் நரேன் அவர்களுக்கு நன்றி. ஆர்த்தி கேரளாவில் ஒரு வுமன் ஐகான். மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்குக் கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. மாரி, ஶ்ரீனி இருவரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். இயக்குநர் அருண் கார்த்தி மிகச்சிறந்த நண்பர். படத்தை வித்தியாசமான ரசனையில் அழகாக உருவாக்கியிருக்கிறார். ஏப்ரல் 14 ல் படம் வருகிறது உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
மாஸ்டர் மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். திவாரகா தியாகராஜன் இசையமைக்க, தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். முகேன் வேல் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார்.