கை விடப்பட்டதா ‘தனி ஒருவன்’ ஹிந்தி ரீமேக்? : வெளியேறினார் சல்மான்கான்
சென்ற ஆண்டு ஜெயம் ரவிக்கு மூன்று ஹாட்ரிக் ஹிட்டுகளில் ஒன்றாக அமைந்த படம் ‘தனி ஒருவன்’.
மோகன் ராஜா இயக்கிய இந்தப்படம் அவருடைய ரீமேஜ் ராஜா என்கிற கறையைத் துடைத்தெறிந்ததோடு மட்டுமில்லாமல் அப்படத்தின் வசூல் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்ய போட்டி போடும் அளவுக்கு பெரிய ஹிட் படமாக அமைந்தது.
தெலுங்கில் இப்படத்தை ரீமேக் செய்வதில் நடந்த பலத்த போட்டியில் நடிகர் ராம் சரணுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
படத்தில் பரபரப்பாக பேசப்பட்ட வில்லன் கேரக்டரில் அரவிந்த் சாமியே நடிப்பது என்று முடிவாக நயன் தாரா கேரக்டரில் ராகுல் ப்ரீத் சிங்க்கை கமிட் செய்து படத்தை ஆரம்பிப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்தப்படம் தமிழில் வெளியான முதல் வாரத்திலேயே படத்தின் வெற்றியைப் பற்றிக் கேள்விப்பட்டு ஹிந்தியில் ரீமேக் செய்ய ஆர்வமாக இருப்பதாகச் சொன்னார் ஹிந்தி நடிகர் சல்மான்கான்.
இயக்குநர் மோகன்ராஜாவும் அந்த செய்தியை உறுதிசெய்து, பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது திடீரென்று தனி ஒருவன் ஹிந்தி ரீமேக் திட்டத்திலிருந்து வெளியேறியிருக்கிறாராம் சல்மான்கான்.
முன்னதாக தனி ஒருவனை ரீமேக் செய்யும் வேலைகளை முடுக்கி விட்டவர் இப்போது அதை நிறுத்தி விட்டு வேறொரு புதுப்படத்தில் பிஸியாகி விட்டாராம்.
எதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை.
