ஐஸ்வர்யா ராஜேஷ்-தேவ் நடிக்கும் ‘வளையம்’!

தமிழ்த் திரையுலகம் எப்போதுமே இளம் இயக்குநர்களின் புது சிந்தனைகளுக்கு ஆதரவு மற்றும் அங்கீகாரம் கொடுக்கும். கடந்த 10 வருடங்களாக ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு இப்படியான இளம் திறமைகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சுலர்’ மற்றும் பல படங்களை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் குறிப்பிடலாம். டிஜி வைஷ்ணவ் கல்லூரி பட்டதாரியான மனோ பாரதி டி.வி சேனல்கள், மீடியா ஹவுஸ் மற்றும் பல வெற்றிகரமான குறும்படங்கள் போன்றவற்றை இயக்கியுள்ளார். அவரது இயக்கத் திறமையைக் கண்டறிந்து அவருடைய புதுப்படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு கைக்கோத்துள்ளார்.
இந்தப் படம் ‘வளையம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. அதிரடி த்ரில்லராக உருவாகி வரும் இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திறமையான தேவ் நடிகராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.இதன் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையிலும், மேலும் சில கூடுதல் காட்சிகள் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. சேத்தன், தமிழ், பிரதீப் ருத்ரா, ஹரிஷ் பேராடி மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோருடன் மேலும் சில முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.