கிச்சா சுதீப், அனுப் பண்டாரி இணையும் ‘பில்லா ரங்கா பாட்ஷா’!

Get real time updates directly on you device, subscribe now.

பாட்ஷா கிச்சா சுதீப், மிகப்பெரிய பாராட்டையும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘விக்ராந்த் ரோனா’ படத்திற்கு பிறகு இயக்குநர் அனுப் பண்டாரியுடன் மீண்டும் கைகோர்க்கிறார். இப்படத்தை, ப்ளாக்பஸ்டர் ஹனுமான் பட தயாரிப்பாளர்களான கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

கிச்சா சுதீப்பின் பிறந்தநாளில் ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு, “பில்லா ரங்கா பாட்ஷா” படத்தின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் கதையை அறிமுகப்படுத்தும், ஒரு அற்புதமான கான்செப்ட் வீடியோவை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இயக்குநர் அனுப் பண்டாரி தனது படங்களில் நுணுக்கமான விவரங்களுடன், தனித்துவமான திரைக்கதையை படைப்பதில் பெயர் பெற்றவர். தற்போது வெளியாகியுள்ள வீடியோவும் அதை நீ
நிரூபிக்கும்படி அமைந்துள்ளது.

Related Posts
1 of 2,038

இந்த கான்செப்ட் வீடியோ கி.பி 2209 இல் எதிர்காலத்தில் நடக்கும் கதைகளத்தினை பற்றிய பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. சுதந்திர தேவி சிலை, ஈபிள் கோபுரம் மற்றும் தாஜ்மஹால் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது, ஒருவன் தனியாக உலகை ஆள்வது போல் தெரிகிறது. மூன்று வெவ்வேறு பகுதிகளையும் காலநிலையும் இருப்பதை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. ரசிகர்கள் பல நுணுக்கமான விவரங்களை கண்டறியும் வகையில் பல ஆச்சரியங்களையும் தொகுத்து தந்துள்ளார் இயக்குநர் அனுப் பண்டாரி.