டப்பிங் பேசி அசத்தினார் அருண் விஜய் மகன்!

Get real time updates directly on you device, subscribe now.

Related Posts
1 of 21

சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படத்தில் அறிமுகமாகும், அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் தனது டப்பிங்கை தொடங்கினார் ! கலையுலகில் மூன்று தலைமுறையாக ஒரு குடும்பம் நடிப்பில், பாரம்பரியமாக ஜொலிப்பது, மிகப்பெரும் சாதனை. நடிகர் விஜயகுமார், அருண் விஜய் மற்றும் இப்போது அவர்களது, தொடர்ச்சியாக அடுத்த தலைமுறையில் ஆர்ணவ் விஜய் வரை நடிப்பு அக்குடும்பத்தில் மரபாக, அழகாக வளர்க்கப்படுகிறது. 2D Entertainment நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படத்தில், தாத்தா-தந்தை-மகன் மூவரும் திரையில் இணைந்து நடிக்கும் செய்தி, ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், ஆர்ணவ் விஜய் இன்று தனது காட்சிகளுக்கான, டப்பிங் பணிகளை செய்யத் தொடங்கினார். இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.