கவின் நடிக்கும் புதிய படம்!

Get real time updates directly on you device, subscribe now.

Olympia Movies சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் எப்போதுமே சிறந்த கதைகள் கொண்ட உணர்வுபூர்வமான திரைப்படங்களை தந்து வருகிறார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் புதிதாக உருவாகும் “Production No.4” திரைப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ‘கடாரம் கொண்டான்’ படத்தின் இயக்குனர் ராஜேஷ் M செல்வாவின் முன்னாள் உதவியாளர் கணேஷ் K பாபு இயக்குகிறார். இத்திரைப்படம் நவீனகால பின்னணியில், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உணர்ச்சிகரமான காதல் கதையாக உருவாகிறது.

Related Posts
1 of 5

கவின் மற்றும் அபர்ணா தாஸ் உடன், ‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ், ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளனர். எழில் அரசு K ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார், கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பைக் கையாள்கிறார், சண்முக ராஜ் கலை இயக்குநராகவும், சுகிர்தா பாலன் ஆடை வடிவமைப்பாளராகவும், அருணாச்சலம் சிவலிங்கம் ஒலி வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக APV மாறன் பணியாற்றுகிறார்.
படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.