நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ரஜினிகாந்த் உதவி

நடிகர் ரஜினிகாந்த் ஏற்கெனவே கொரோனா நிவாரணமாக பெப்ஸி ஊழியர்களுக்கு 50 லட்ச ரூபாய் வழங்கி இருந்தார். இப்போது நலிந்த நிலையில் உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பயன்படும் வகையில் அரிசி உள்பட நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ரஜினிகாந்த் சார்பாக அரிசி, மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. சென்னை சாலிகிராமத்திலுள்ள செந்தில் ஸ்டுடியோவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி திருமதி.கீதா, பொது மேலாளர் பால முருகன் ஆகியோர் முன்னிலையில் 600- க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு இன்று பொருட்கள் வழங்கப்பட்டது.