என்னப்பா இது ரஜினிக்கு வந்த சோதனை

“மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி” என்பது போல் ஆகிவிட்டது நடிகர் ரஜினிகாந்தின் நிலைமை. சமீபத்தில் நடைபெற்ற சாத்தான்குளம் லாக்கப்டெத் மிகத்தீவிரமாக தேசமெங்கும் பேசப்பட்டது. பாலிவுட் நடிகர் நடிகைகள் எல்லாம் குரல் கொடுத்த பிறகும் கூட நடிகர் ரஜினிகாந்த் இதைப்பற்றி வாய் திறக்கவேயில்லை. பலரும் அதைப்பற்றி விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் திடீரென ரஜினி நேற்று ஓர் ஆக்ரோஷமான போஸ் கொடுத்து அநீதி இழைத்த அவங்களை சத்தியமா விடவே கூடாது என்ற ரீதியில் ஒரு ட்வீட் செய்திருந்தார். அது உடனடியாக ட்ரெண்ட் ஆனது. ஆனால் அப்படியே ரஜினிக்கு அது ரிவர்ஸும் ஆனது. இவ்வளவு நாள் சும்மா இருந்துட்டு இப்ப மட்டும் ஏன் இப்படி சீன் போடுறாரு என்ற கிண்டல்களும் மற்றும் அவர் ஆக்ரோசமாக கொடுத்த போஸும் மீம்ஸ் பிரியர்களுக்கு பெரிய விருந்தாகி விட்டது. மேலும் இன்னொரு தலைவலியாக சென்ற வாரம் சன்டிவியில் வெளியான பேட்ட படத்தின் ரேட்டிங்கை விட விஜய்யின் ஜில்லா அதிக ரேட்டிங்கை வாங்கி இருப்பதும் ரஜினிக்கு அகச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாம்