தெலுங்கு தல-யாகும் சிரஞ்சீவி

Get real time updates directly on you device, subscribe now.


இயக்குநர் சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் அஜீத்குமார், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகி பெரும் வெற்றிபெற்றத் திரைப்படம் “வேதாளம்”. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை அஜீத்தின் பில்லா படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த இயக்குநர் மெஹர் ரமேஷ் இயக்கலாம் என்று தெரிகிறது. தற்போது ஆச்சார்யா படத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி இதற்குப் பிறகு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான “லூஸிபர்” படத்தின் ரீமேக்கில் நடித்துவிட்டு பின்னர் தான் ‘வேதாளம்” தெலுங்கு ரீமேக்கில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.