பிரதமர் மோடிக்கு நடிகர் உதயா கடிதம்!

மரியாதைக்குரிய நமது பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நடிகர் உதயா நன்றி கடிதம் அனுப்பி உள்ளார்….மறைந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் திரு அவில்தார் பழனி அவர்களுக்கு உயரிய விருதான “வீர் சக்ரா”விருதினை குடியரசு தினத்தன்று வழங்கி பெருமை சேர்த்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்….நடிகர் உதயா, “செக்யூரிட்டி” படக்குழுவினரும் இவ்விருதினை அவருக்கு வழங்குமாறு கோரிக்கை கடிதம் 4 .1 2021 பிரதமர் மோடிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது….

Related Posts
1 of 2

அதன் கோரிக்கை கடிதத்தை மாநிலத் தலைவர் L.முருகன் அவர்களிடம் நேரடியாக உதயா வழங்கினார்….பிரதமர் மோடி ஜி அவர்களுக்கும், ராணுவத் துறை அமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு மாநிலத் தலைவர் முனைவர் எல்.முருகன் அவர்களுக்கும் தனது நன்றி கடிதத்தை தனது சார்பாகவும் ” செக்யூரிட்டி” படக்குழுவினர் சார்பாகவும்,மறைந்த ராணுவ வீரர் பழனி அவர்களின் குடும்பத்தின் சார்பாகவும் அனுப்பியுள்ளார்…