அனுஷ்காவுக்கு திருமணம் : அதுசரி மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
திருமண வயதில் திருமணம் செய்திருந்தால் இந்நேரம் அனுஷ்காவுக்கு 13 வயதில் மகனோ, மகளோ இருந்திருக்க வேண்டும்.
ஆனால் நடிப்பு நடிப்பு என்று சதா அந்த நினைப்பிலேயே இருந்தவர் திருமணத்தைப் பற்றி யோசிக்கவே நேரமில்லாமல் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
இதோ வயசு 35 ஆகி விட்டது. இதுவே திருமணத்தைத் தாண்டிய டூமச் வயசு, இனிமேலும் காலம் தாழ்த்துவது சரியில்லை என்று குடும்பத்தார் கேட்டுக் கொண்டதையடுத்து திருமணம் செய்ய க்ரீன் சிக்னல் காட்டியிருக்கிறார் அனுஷ்கா.
முன்னதாக பாகுபலி, பாகுபலி-2 உட்பட சில தெலுங்கு படங்களில் நடிகர் பிரபாஸுடன் ஜோடி போட்டதால் இருவருக்கும் காதல் என்று தெலுங்கு ஊடகங்கள் கொளுத்திப் போட்டன.
குறிப்பாக பாகுபலி படங்களில் பிரபாஸ் – அனுஷ்காவின் ஜோடிப்பொருத்தம் ரசிகர்களை கவர்ந்ததால் இருவரும் நிஜத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெலுங்கு சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
அந்தக் கருத்து தற்போது நிஜமாகும் போலத் தெரிகிறது.
ஆமாம், அனுஷ்காவை திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை பிரபாஸ் தான் என்று கூறியிருக்கிறார் அவருக்கு நெருக்கமான மும்பையைச் சேர்ந்த நண்பர் ஒருவர். ”வருகிற டிசம்பர் மாதம் பிரபாஸ் – அனுஷ்கா இருவருக்கும் நிச்சயதார்த்தம் இருக்கும், அதன் மூலம் இருவரும் தங்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறார்கள் என்று செய்தி ஒன்றை சமூகவலைத்தளங்களில் பரப்பி விட்டிருக்கிறார் மேற்படி நண்பர்.
இருந்தாலும் ”அனுஷ்காவைப் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. திருமணம் என் தனிப்பட்ட விவகாரம். நடக்கும் போது அதைப்பற்றி மீடியாக்களிடம் கண்டிப்பாக கூறுகிறேன் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபாஸ்.