ரசிகர்களுடன் சேர்ந்து தனிக்கட்சி : நவம்பர் 7 பிறந்தநாளில் அறிவிக்கிறார் கமல்ஹாசன்!

Get real time updates directly on you device, subscribe now.

kamal1

ஜினி வருகிறாரோ இல்லையோ ஆனால் கமல் அரசியலுக்குள் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியல் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வந்தார் கமல்ஹாசன்.

இதனால் அவர் நிச்சயமாக அரசியலுக்குள் நுழைவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர்.

ஆரம்பத்தில் அரசியல் குறித்த பேச்சில் அதை வெளிப்படையாக பேசாத கமல் அடுத்தடுத்த பேச்சுகளில் தான் வருவேன் என்கிற தொனியில் பேசினார்.

Related Posts
1 of 26

கமலின் அரசியல் வருகை குறித்து பொது மக்களிடையேயும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அதை உறுதி செய்யும் விதமாக இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தனது ஆதரவாளர்களை சந்தித்தார் கமல். அப்போது தமிழகத்தில் தனக்கு எப்படி மக்களிடம் செல்வாக்கு உள்ளது? என்று ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், வருகின்ற நவம்பர் 7ம் தேதி கமலின் 63வது பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினத்தில் ரசிகர்களுடன் சேர்ந்து தனிக்கட்சி தொடங்க கமல் முடிவு செய்திருக்கிறாராம்.

ஏற்கனவே கேரள முதலமைச்சர் மற்றும் டெல்லி முதலமைச்சர் ஆகியோருடன் அரசியல் சூழல் குறித்து கமல் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.