தமிழ் சினிமாவில் புது அலையை உருவாக்க வரும் பாக்யஸ்ரீ!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 1950 களின் தமிழ்நாட்டை பின்னணியாகக் கொண்ட ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் பாக்கியஸ்ரீ போர்ஸ் அறிமுகமாகிறார். நடிப்பு திறனை வெளிப்படுத்தும் ஆழமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பது திரைத்துறை வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாத் துறையில் அவர் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்த கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு தமிழ் தெரியாவிட்டாலும், இந்த மொழியைக் கற்றுக்கொள்ள சிரத்தை எடுத்துக் கொண்டார் பாக்யஸ்ரீ. இதன் மூலம் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு இன்னும் ஆழமாக உயிர் கொடுக்க முடியும் என நம்புகிறார். அவரது கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் இயல்பான திரை இருப்பு அவரை ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனித்து நிற்க வைக்கிறது.

‘காந்தா’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் நிச்சயம் ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பாக்யஸ்ரீக்கு தமிழ் சினிமாவில் இது ஒரு அற்புத பயணத்தின் ஆரம்பம்!