கோல்டன் விசா பெற்றார் நடிகை கோமல் சர்மா!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சட்டப்படி குற்றம் என்கிற படத்தில் அறிமுகமானவர நடிகை கோமல் சர்மா, அதன்பிறகு வைகை எக்ஸ்பிரஸ், ஷாட் பூட் த்ரீ, பப்ளிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘பரோஸ்’ என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரக அரசு கோமல் சர்மாவுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. பொழுதுபோக்கு துறையில் இவரது திறமை, அர்ப்பணிப்பு, பங்களிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த கோல்டன் விசா கோமல் சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. துபாயில் நடைபெற்ற நிகழ்வில் இந்த கோல்டன் விசா வழங்கும் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எக் டிஜிட்டல் ( ECH Digital) நிறுவனத்தின் சிஇஓ திரு. இக்பால் மார்கோனி இந்த கோல்டன் விசாவை கோமல் சர்மாவிடம் வழங்கினார்.

தமிழ் திரையுலகில் விஜய்சேதுபதி, அருண்விஜய், பார்த்திபன், திரிஷா, அமலாபால், நஸ்ரியா, ராய்லட்சுமி உள்ளிட்ட வெகு சில நட்சத்திரங்கள் மட்டுமே இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ள நிலையில் தற்போது நடிகை கோமல் சர்மாவுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.