அதிக திரையரங்குகளுக்காக தள்ளிப்போகிறது’அடங்காமை ‘ !

வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன்,ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள். தேவையான எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் அதிக திரையரங்குகளில் வெளியிடும் நோக்கில் 2022 ஜனவரியில் ‘அடங்காமை’ உலகமெங்கும் வெளியாகிறது.
இப்படத்துக்குக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர். கோபால். இவர், திரையுலகில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ளவர். தன் முதல் படமாக ‘மங்களாபுரம்’ என்ற படத்தை இயக்கியவர். இது இவருக்கு இரண்டாவது படம்.
இலங்கையைச் சேர்ந்த சரோன் நாயகனாக நடித்திருக்கிறார். ஆந்திராவில் பிரபல விளம்பர மாடலான பிரியா கதாநாயகி. மற்றும் யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா,முகிலன் ஆகியோர்
முக்கியமான பாத்திரங்களை ஏற்றுள்ளார்கள்.