கீர்த்தி சுரேஷ் ,ராதிகா ஆப்தே நடிக்கும் ‘அக்கா’!

Get real time updates directly on you device, subscribe now.

முன்னணி இந்திய தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஸ்ட்ரீமிங் தயாரிப்புப் பிரிவான YRF என்டர்டெயின்மென்ட், அதிகம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கும் அதன் அடுத்த படைப்பிற்கு பச்சைக் கொடி காட்டி இந்தியாவில் இன்று மிகவும் பாராட்டப்படும் இரண்டு பெண் நடிகர்களை ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கும் கடுமையான பழிவாங்கும் தொடராகும்! இந் கீர்த்தி சுரேஷ் vs ராதிகா ஆப்தே நடிப்பில் கொடூரமான தொடராக இருக்கும்.

Related Posts
1 of 6

கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இன்று இந்தியாவில் மிகவும் திறமையான பெண் நடிகர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் நம்பமுடியாத அளவுக்கு இயல்பான கலைஞர்கள், திரையில் அட்டகாசமான திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் படத்திற்கு படம் அடுத்த கட்டத்திற்கு போய்க் கொண்டிருக்குக்கிறார்கள்! எனவே, கீர்த்தியும் ராதிகாவும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவது அக்காவை தற்போது நாட்டில் உருவாக்கப்படும் மிகவும் சுவாரஸ்யமான ஸ்ட்ரீமிங் தொடர்களில் ஒன்றாக மாறி இருப்பதாக வர்த்தக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

“இந்தத் தொடரை அறிமுக எழுத்தாளரும் இயக்குநருமான தர்மராஜ் ஷெட்டி இயக்குகிறார், இவர் சமீபத்தில் ஆதித்யா சோப்ராவால் கண்டறியப்பட்ட படைப்பாளி ஆவார். இவரின் ‘அக்கா’ தொடரின் தொலைநோக்கு பார்வை ஆதித்யாவின் கவனத்தை ஈர்த்தது, மேலும் YRF என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க தொடர்களில் ஒன்றாக ‘அக்கா’வை மாற்ற ஆதியின் சுருக்கமான விளக்கம் பச்சைக்கொடி காட்ட வழி செய்தது. இந்தத் தொடரைச் சுற்றி சூழ்ச்சியைக் கட்டமைக்க இந்தத் தொடரின் ஒவ்வொரு விவரமும் YRF ஆல் வேண்டுமென்றே மறைத்து வைக்கப்படும்,” என்று மேலும் அந்த வர்த்தக வட்டாரத்தில் கூறப்படுகிறது.