நவம்பர் 22அன்று இந்தியா திரையரங்குகளில் வெளியாகிறது ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’!

Get real time updates directly on you device, subscribe now.

பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படத்தை நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தியாவில் விநியோகிக்கிறது. இந்தத் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் நவம்பர் 22, 2024 அன்று வெளியாகிறது. இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் இப்படம் நவம்பர் மாதம் வெளியாகிறது.இயக்குநர் பாயல் கபாடியா மற்றும் நடிகர்-தயாரிப்பாளர் ராணா டகுபதி ஆகியோர் இந்தப் படத்தின் உலகளாவிய பயணம் மற்றும் இந்தியாவில் அதன் வெளியீடு குறித்தான தங்கள் எண்ணங்களை மும்பையில் இன்று (17.10.2024) நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து கொண்டனர்.

நவம்பர் 22, 2024 அன்று மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கொல்கத்தா உட்பட இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படம், பிரான்சின் பெட்டிட் சாகோஸ் மற்றும் இந்தியாவின் சாக் & சீஸ் ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ இண்டோ-பிரெஞ்ச் கூட்டுத் தயாரிப்பாகும். இத்திரைப்படத்தை இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் ஸ்பிரிட் மீடியா விநியோகிக்கிறது.