நல்ல விசயத்தை பவன் கல்யாண் துவங்கியுள்ளார்!

உலகே கொரோனா தொற்றால் நடுங்கிப் போயுள்ளது. தற்போது நம் இந்தியத் தேசம் தொற்றுப்பரவாமல் தடுக்க கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. மக்களும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். நம் தேசம் பெரிய பணக்கார தேசம் அல்ல. எப்படியும் பெரிய பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும். அதற்கு பணம் படைத்தவர்கள் அரசுக்குத் துணை நிற்க வேண்டி வரும்.

முக்கியமாக சினிமா நட்சத்திரங்கள் இப்படியான நேரங்களில் உதவ வேண்டும். அதற்கான முதல் அடியை தெலுங்கானாவைச் சேர்ந்த பவண் கல்யாண் செய்துள்ளார். அவர் மத்தியரசுக்கு 50 லட்சம் ரூபாயும் தெலுங்கானா அரசுக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதை இந்திய நடிகர்கள் அனைவரும் கடைப் பிடித்தால் எளியோரின் துயர் துடைக்க ஏதுவாக இருக்கும்

Actor bhavankalyan
Comments (0)
Add Comment