ஹரீஸ் கல்யாணின் அடுத்த படம்

‘பியார் பிரேமா காதல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது ஹீரோ ஆட்டத்தை வெற்றிகரமாக விளையாட ஆரம்பித்திருக்கிறார் பிக்பாஸ் புகழ் ஹரீஸ் கல்யாண்.

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகள் வந்தாலும் நிதானமாக கதைகளைத் தேர்ந்தெடுக்கும் அவர் அடுத்து, புரியாத புதிர் பட இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியோடு கை கோர்த்திருக்கிறார்.

நிச்சயம் அது ஒரு தூய காதல் கதையாக, அதே நேரத்தில் மிகவும் அழுத்தமான படமாக இருக்க போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியிடம் கேட்டபோது போது, “இது தனித்துவமான முறையில் சொல்லப்படும் பயண பின்னணியைக் கொண்ட ஒரு பிடிவாதமான காதல் கதை. இதில் ஹரீஷ் கல்யாண் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தின் நாயகியாக நடிக்கிறார். அவருடைய கதாப்பாத்திரமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் மா கா பா ஆனந்த், பாலசரவணன், பொன்வண்ணன் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்றார்.

ரஞ்சித் ஜெயக்கொடியின் முந்தைய படமான புரியாத புதிர் படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். முழுப்படமும் சென்னையிலும், மிகவும் அழகான லே மற்றும் லடாக் பகுதிகளிலும் படமாக்கப்படுகிறது.

இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் படக்குழு, படத்தின் தலைப்பு மற்றும் சிங்கிள் பாடல் ஒன்றையும் அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறது. இந்த படத்தை மாதவ் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் பாலாஜி கப்பா தயாரித்திருக்கிறார்.

Harish KalyanRanjit Jeyakodi
Comments (0)
Add Comment