தம்பி அஜீத் நீங்க இப்படிப் பண்ணலாமா..? : மன்சூர் அலிகான் செம நக்கல்!

நாலு நாளில் 100 கோடி வசூல் என்று ‘அள்ளி’ விட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

ஆனால் அதை முறையாகச் சொல்ல வேண்டிய தயாரிப்பாளரோ? இதுவரை ஒருநாள் கலெக்‌ஷனைக் கூட கணக்குக் காட்டவில்லை.

அவர் சொல்வதும் சொல்லாததும் ஒருபுறம் இருக்கட்டும்.

எந்த மேடையாக இருந்தாலும் உண்மையை வெள்ளந்தியாகச் சொல்லி வைப்பதில் முக்கியமானவர் நடிகர் மன்சூர் அலிகான். அப்படிப்பட்டவர் நடிகர் அஜித்துக்கு அட்வைஸ் ஒன்றை சொல்லியிருக்கிறார்.

நீங்களே படியுங்கள்… அது அட்வைஸா? அல்லது செம நக்கலா? என்று குழம்பிப் போய் விடுவீர்கள்.

”தம்பி அஜித்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கள்….

தாங்கள் விவேகம் முழுப்படத்தையும் வெளிநாட்டிலேயே அங்குள்ள தொழிலாளர்களை வைத்து எடுத்து விட்டீர்கள்.

தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் படமெடுத்து தமிழ்க் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும்.

உங்கள் படம் ஓட வேண்டும் என திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறீர்கள். தமிழ்நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோயிலுக்கு வந்திருக்கக் கூடாதா?

உரிமையுடன்

நடிப்புத் தொழிலாளி மன்சூர் அலிகான்.

இப்பச் சொல்லுங்க இது அட்வைஸா? அல்லது நக்கலா?

ajithAjithkumarMansoor Ali KhanVivegamvivekam
Comments (0)
Add Comment