விவேக் படத்துக்கு கேரள அமைச்சர் பாராட்டு!

வையம் மீடியாஸ் சார்பில் தயாரிப்பாளர் வி.பி. விஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் “எழுமின்”.

இப்படத்தில் விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்த கேரள விளையாட்டு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஏ.சி. மொய்தீன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களின் உள்துறை செயலாளர் எம்.வி. ஜெயராஜன் ஆகியோர் படக்குழுவினரை அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், இது போல சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் கூறும் படங்களைத் தொடர்ந்து எடுக்க வாழ்த்துகளையும் கூறியுள்ளனர்.

Actor VivekDevayaniEzhuminEzhumin Movie NewsVivek
Comments (0)
Add Comment