ஹீரோயின் சென்ட்ரிக் படங்களை ரசிகர்கள் வரவேற்கத் துவங்கி இருப்பது தமிழ் சினிமாவிற்கு ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியைத் தந்துள்ளது. ஆடை படம் மூலம் சோலோ ஹீரோயினாக தனிக்கவனம் பெற்ற நடிகை அமலாபால் தற்போது “அதோ அந்த பறவை போல”என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை கே.ஆர் வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட்டில் அமலாபால் கலந்துகொண்டு பேசும்போது,
” ரொம்ப ஹேப்பினெஸ் கொடுத்த படம் இது. கதை ஆசிரியர் அருண் இல்லாவிட்டால் இந்தபடம் இல்லை. வினோத் கவாஸ்கர், அருண் எல்லாம் பெரிய போராட்டத்தைச் சந்தித்து இருக்கிறார்கள். இவர்கள் கஷ்டம் முன்னாடி படத்தில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை.
இயக்குநர் வினோத்திற்கு வாழ்த்துகள். ரொம்ப யெங் டீம் இவர்கள். இவர்கள் லாஞ்ச் ஆகுற படத்தில் நான் இருக்கிறது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஒரு ஹீரோயின் காட்டுக்குள்ள ஆக்ஷன் பண்ணா எப்படி இருக்கும் என்று ஒரு டாக் இருந்தது. ஆனால் இந்தக் கதை அதை சரி செய்துவிடும்”என்றார்