‘அண்ணனுக்கு ஜே’ படத்துக்காக மேக்கப் போடாத மஹிமா!

முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்.

இப்படத்தினை அறிமுக இயக்குனரான ராஜ்குமார் இயக்கியுள்ளார். இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் ராதாரவி, மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அர்ரோல் கொரளி இசை அமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி அறிமுக ஒளிப்பதிவாளராக இப்படத்தில் அறிமுகமாகி உள்ளார். எடிட்டிங் ஜி.பி வெங்கடேஷ் செய்துள்ளார்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தினேஷ் “இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கும் வெற்றிமாறன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மஹிமா அருமையாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் அர்ரோல் 7 பாடல்கள் நன்றாக இசையமைத்துள்ளார். ராதாரவி அவர்களுடன் நடித்தது மிக்க சந்தோசமாக உள்ளது. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்” என்றார்.

“முதலில் வெற்றிமாறன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இப்படத்திற்கு பக்கபலமாக கூட இருந்துள்ளார். நடிகர் தினேஷ் அவர்களுக்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன். நடிகை மஹிமா மேக்கப் கூட போடாமல் நடித்திருந்தார். மயில்சாமி மற்றும் வையாபுரி இருவரும் எப்பபோதும் நகைச்சுவை நடிகர்களாக பல படங்களில் நடித்து இருப்பார்கள், இந்த படத்தில் ஒரு சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்” என்றார் இயக்குனர் ராஜ்குமார்.

நாயகி மஹிமா நம்பியார் பேசும்போது “வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின் தயாரிப்பு நிறுவனத்தில் படம் நடிப்பது சந்தோசமாக உள்ளது. இந்தப் படத்தில் தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன். இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி. மேலும் இந்த படத்தில் எனது சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறேன்” என்றார்.

annanukku jaiAnnanukku jai Press MeetAnnanukku jai Press Meet NewsDinesh RaviMahima Nambiar
Comments (0)
Add Comment