மலை உச்சியில் படப்பிடிப்பு – பயத்தில் ஓட்டமெடுத்த புதுமுக நாயகி!

திரவன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அவளுக்கென்ன அழகியமுகம்’.

ஏ.கேசவன் இயக்கும் இந்த திரைப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். படத்தின் பாடல் காட்சிகளை கொடைக்கானல் மலை உச்சியில் படமாகிக் கொண்டு இருந்தனர்.

மிக உயரமான இடத்தில் வைத்து பாடலை நடன இயக்குனர் ஷங்கர் படம்பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் உயரமான இடத்தில் நிற்க வைத்தால் பயத்தில் இருந்த நடிகை அனுபமா பிரகாஷ் மாலை படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனது அறை வரை சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவர், யாரிடமும் சொல்லாமல் மதுரையில் இருந்து விமானம் மூலம் தனது சொந்த ஊர் டெல்லிக்கு சென்று விட்டார்.

இந்த தகவல் தெரியாமல் படப்பிடிப்பு தளத்தில் காத்திருந்த குழுவினர்கள். அவரை கொடைக்கானல் முழுவதும் தேடினர். பின்பு தான் தெரிந்தது அவர் டெல்லி சென்றது, பின்னர் உடனே தயாரிப்பாளர் டெல்லிக்கு சென்று சமாதானம் செய்து மீண்டும் படபிடிப்பிற்கு அழைத்து வந்தார்.

“அவளுக்கென்ன அழகியமுகம்” திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம்7தேதி வெளியாகிறது.

Avalukkenna Alagiya MugamMovie News
Comments (0)
Add Comment