மாறனின் திரில்லர் வரிசையில் மற்றொரு படம்
Who is kidnapper? என்ற புள்ளியில் படம் துவங்குகிறது..தன் காதலிக்காக ஸ்ரீகாந்தின் குழந்தையைக் கடத்துபவதற்கு தயாராகிறார் ஜிவி பிரகாஷ். ஆனால் ஜிவி பிரகாஷ் கடத்துவதற்கு முன் குழந்தையை வேறு யாரோ கடத்திவிடுகிறார்கள். குழந்தையைக் கடத்தியது யார்? ஜிவி பிரகாஷின் பிரச்சனைக்கு தீர்வு என்ன? என்பதே படத்தின் கதை
ஜிவி பிரகாஷ் கேரக்டர் ஆழமாக எழுதப்படவில்லை. அதனாலே அவரது நடிப்பு ப்ளாஸ்டிக்காக இருக்கிறது. இந்த வார்த்தைகளை அப்படியே இன்னும் பலரின் நடிப்பையும் சொல்லலாம். பிந்துமாதவி, ஸ்ரீகாந்த், லிங்கா, ரமேஷ்திலக் உள்ளிட்ட பல கேரக்டகள் ஒகே ரகமாகவே நடித்துள்ளனர்
கோகுல் பினாய் தனது ஒளிப்பதிவு பணியை திறம்பட கையாண்டுள்ளார். சாம் சி எஸ் பின்னணி இசையில் வழக்கம் போல நல்ல மைகேஜை கொடுத்துள்ளார். எடிட்டர் ஷான் லோகேஷ் எடிட்டிங்கில் ஜம்ப் இருக்கிறதா.. இல்லை அவருக்கு போதிய ஷாட்கள் இயக்குநர் தரப்பிலிருந்து செல்லவில்லையா என்று தெரியவில்லை
பரபர திரைக்கதை வேண்டும் என இயக்குநர் மெனக்கெட்டுள்ளார். ஆனால் கடல்போன்ற லாஜிக் ஓட்டைகளும் நம்ப முடியாத காட்சிகளும் படம் பார்க்கும் நம்மையே ப்ளாக்மெயில் செய்வது தான் சோகம்
2.5/5