ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT)- விமர்சனம்

 

இது ‘துல்கர் சல்மானுக்கு நல்ல கம்பேக்’ என்று சொல்லும்படியான படம்

ஒரு எளிய கிராமத்திலுள்ள கதையின் நாயகி சாத்விகா வீரவல்லிக்கு 16 வயதிலே துல்கர் சல்மானோடு திருமணம் நடந்துவிடுகிறது. முதலிரவில் நாயகியின் வயதை அறிந்துகொள்ளும் ஹீரோ, அவரிடம் அவள் கனவு என்ன என்பதை கேட்டுத் தெரிந்துகொள்கிறார். விண்வெளிக்குச் செல்லவேண்டும் என்ற அவளின் கனவுக்கு தோள் கொடுத்து உயர்கிறார் ஹீரோ. ஹீரோவின் உதவியோடு ஹீரோயின் எப்படி விண்வெளிக்குச் சென்றார் என்பதே படத்தின் கதை

துல்கர் சல்மான் சமத்துப் பிள்ளையாக நடித்துள்ளார். பெண் பிள்ளைகளைப் பெற்ற தகப்பன்கள், ‘நம்ம பொண்ணுக்கு இப்படியொரு பையன பார்க்கணும்பா” என்று சொல்லும் படி அசத்தியுள்ளார். சாத்விகா வீரவல்லிக்கு இது லைப்டைம் கேரக்டர் பின்னியுள்ளார். ஸ்ருதிஹாசன் பாசிட்டிவான ரோலில் பாசிட்டிவாக நடித்துள்ளார். நாசர், ஸ்வாசிகா உள்ளிட்ட பல கேரக்டர்கள் சிறப்பு செய்துள்ளனர்

சுஜித் சாரங் தரமான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பெரும்பலம் எனலாம்

கதையில் சிற்சில மைனஸ் இருந்தாலும் கதை சொல்லும் செய்தி அனைத்தையும் ப்ளஸ்- ஆக்கிவிடுகிறது. ஒரு நல்ல எமோஷ்னல் டிராவல் மற்றும் மோட்டிவேசன் படமாக முடிகிறது AOT. நிச்சயமாக பெண்பிள்ளைகளோடு பார்க்க வேண்டிய படத்தைத் தந்துள்ளார் இயக்குநர் பவன் சதினேனி
3.5/5

Actor Tulkar SalmanAOT movie