புராண கால சாவித்திரி போல நவீன கால சாவித்திரி கணவனை காப்பாற்ற போராடும் போராட்டமே படம்
பெரிய லாயராக வரவேண்டும் என ஆசைப்பட்டு மிகப்பெரிய லாயரான மிஷ்கினிடம் உதவியாளராக சேர்கிறார் கீர்த்தி சுரேஷ். ஒரு கட்டத்தில் தன் கணவர் தீபக்கிற்காக மிஷ்கினுக்கு எதிராக வாதாடும் சூழல் அவருக்கு வருகிறது. அந்த வழக்கில் அவர் வென்றாரா இல்லையா என்பதே படத்தின் திரைக்கதை
கீர்த்தி சுரேஷ் தனது சிறப்பான நடிப்பை இந்தப்படத்திலும் கொடுத்துள்ளார். மேலும் காமெடி காட்சிகளில் இன்னும் அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார். தீபக் கேரக்டரில் வருபவரின் நடிப்பும் ஒகே. மிஷ்கின் பல காட்சிகளில் கோர்ட் தாண்டவம் ஆடியுள்ளார். பால சரவணன் தரமான பன்ச்களை அள்ளித் தெளித்துச் சிரிக்க வைக்கிறார்
சாம்.சி.எஸ் தனது இசையில் இரைச்சலை குறைத்துள்ளார். அது நல்ல ஆறுதலைத் தருகிறது. ஒளிப்பதிவாளர் கோர்ட்டுக்குள்ளே நடக்கும் காட்சிகளை கூட கிரிஷ்ப்பாக எடுத்துள்ளார்.
எந்தக் கேரக்டர்களுக்கும் ஒரு எமோஷ்னல் பாண்டிங் என்பது துளியுமில்லை. அதனால் படம் எமோஷ்னலாக கனெக்ட் ஆகவில்லை. வெறும் தட்டையான வசனங்களால் மட்டும் நல்ல கோர்ட் டிராமாவை கொண்டு வர முடியாது
அழுத்தமான நடிகர்கள் கிடைத்தும் அழுத்தமான கதை இல்லாமல் திண்டாடுகிறார் இந்த சாவித்திரி
2.5/5