‘கத்தி’யோடு கடையை சாத்துறாராம் மெகா ஸ்டார்!

விவசாயிகள் சம்பந்தப்பட்ட சென்சிடீவ் பிரச்சனையைப் பேசும் படமென்பதால் ‘கத்தி’யின் தெலுங்கு ரீமேக்கில் எந்த முன்னணி ஹீரோவும் நடிக்க முன் வரவில்லை.

எதற்கு நடிப்பானேன்… அங்குள்ள அரசியல்வாதிகளின் வாய்களில் கடிபடுவானேன் என்று ஒதுங்கிக் கொண்டனர்.

இப்படி எல்லோரும் தூர ஓடினாலும் தைரியமான அந்த ரீமேக்கில் நான் நடிக்கிறேன் என்று முன் வந்தார் சிரஞ்சீவி. நிஜ வாழ்க்கையில் அவரும் ஒரு அரசியல்வாதி என்பதால் வருகிற எதிர்ப்புகளை ஈஸியாக சமாளித்து விடலாம் என்பது தான் அவருடைய திட்டம்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் படப்பிடிப்புக்கான ஆரம்ப வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இது சிரஞ்சீவியின் 150வது படமென்பதால் அவருடைய ரசிகர்களும் படத்தை இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக வரவேற்று கொண்டாட திட்டமிட்டனர்.

அப்படி ஆக்டீவ்வாக இருக்கும் ரசிகர்களை அப்செட்டாக்கும் விதமாக ஒரு அறிவிப்பை புத்தாண்டில் வெளியிட்டிருக்கிறாராம் சிரஞ்சீவி.

”பாலிடிக்ஸ்ல பிஸியா இருக்கிறதுனால என்னால தொடர்ந்து படங்கள்ல நடிக்க முடியாது , இனிமே என் ரசிகர்கள் அவங்கவங்க குடும்பத்தை கவனிக்கிற வேலையைப் பாருங்க” என்றும் அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

ChiranjeeviKathi Remake
Comments (0)
Add Comment