இப்பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் மீது நடிகர் பார்த்திபனிடம் ‘பச்ச குதிர’ முதல் ‘கதை திரைக்கதை வசனம்’ படம் வரை இணை இயக்குனராக பணியாற்றிய கிருஷ்ண மூர்த்தி என்பவர் பாக்யராஜ் தலைமையிலான எழுத்தாளர் சங்கத்தில் ‘கதை திருட்டு புகார்’ கொடுத்திருக்கிறார்.
2016 ல் எழுத்தாளர் சங்கத்தில் கதையை முறைப்படி பதிவு செய்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி தற்போது எடுக்கப்பட்டிருக்கும் ‘கோமாளி’ படத்தின் கதை என்னுடைய கதை தான் என்கிறார்.
புகாரை ஒரு வாரமாக விசாரித்துக் கொண்டிருக்கும் பாக்யராஜ் அது சம்பந்தமாக விளக்கம் கேட்க, ‘கோமாளி’ படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குனர் பிரதீப்பிடம் நேரில் வரச்சொல்லி தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால் இன்றுவரை இருவரும் நேரில் செல்லவில்லையாம்.
இதற்கிடையே 4 வருடங்களுக்கு முன்பே இந்தக் கதையை என்னிடம் சொல்லியிருந்தார். அந்தக் கதையை நானே படமாக தயாரிக்க நினைத்திருந்தேன். தன் இணை இயக்குனருக்கு ஆதரவாக கடிதம் ஒன்றை எழுத்தாளர் சங்கத்தில் கொடுத்திருக்கிறார் நடிகர் பார்த்திபன்.
நடிகர் சங்கத் தேர்தலில் ஐசரி கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவராக போட்டியிட்டவர் பாக்யராஜ். அப்படியிருக்கும் போது அவருக்கு எதிரான இந்தப் புகாரில் எந்தளவுக்கு அவர் நியாயமாக நடந்து கொள்வார் என்பது தான் சினிமா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.