மணிரத்னம் படத்தில் அறிமுகமாகும் ‘மல்லையா’ ஆளு!

‘காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் இந்த மாதம் ரிலீசாகப் போகும் படம் ‘செக்க சிவந்த வானம்’.

அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக அறிமுகமாகிறார் டயானா எரப்பா.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க்கில் பிறந்த இவர் 2011ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். பின்பு 2012 இல், உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ‘ஷாங்காய் எலைட் மாடல் லுக்’ போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்றார்.

சர்வதேச பேஷன் பத்திரிகைகளான வோக், எல்லி, ஹார்ப்பர்ஸ் பஜார், காஸ்மோபொலிட்டன் மற்றும் ஜி.கியூ போன்றவைகளில் இவரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் வங்கியில் 9,000 கோடி ரூபாயை கடன் வாங்கி விட்டு கட்டாமல் நாட்டை விட்டு தப்பிப்போன விஜய் மல்லையா ஆண்டு தோறும் வெளியிடும் கிங்ஃபிஷர் 2015 மற்றும் 2017 ஆண்டுகளின் காலண்டர்களில் இடம்பெற்றிருக்கிறார்.

அதோடு லாக்மே பேஷன் வீக், அமேசான் பேஷன் வீக், கௌச்சர் வீக் போன்ற பிரசதிபெற்ற பேஷன் பத்திரிகைகளில் இடம்பெற்ற இவரது எளிமையான அழகு, நளினம் மற்றும் நடையழகு ஆகியவை அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி பேஷன் பத்திரிகைகள் இவரை ஒரு இளவரசியாக கொண்டாடின.

தருண் தஹிலியானி, மனிஷ் மல்ஹோத்ரா, அஞ்சு மோடி, சாந்தனு நிக்கில், கவுராவ் குப்தா, சுனீத் வர்மா, அனிதா டோங்ரே, பாயல் சிங்கல், மோனிஷா ஜெய்சிங், லைப் ஸ்டைல், பீமா ஜூவல்லரி மற்றும் ஆஸ்வா ஜூவல்லரி உள்ளிட்ட பல முன்னனி டிசைனர்களின் விளம்பர மாடலாக நடித்துள்ளார்.

அப்படிப்பட்ட இவரை தமிழ்சினிமாவில் மணிரத்னம் கதாநாயகியாக அறிமுகப்படுத்துவது சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Chekka Chivantha VaanamDayana ErappaMani Ratnam
Comments (0)
Add Comment