களை கட்டுது ‘கொடி’ ரிலீஸ் கொண்டாட்டம் : ரசிகர்களை நேரில் சந்திக்கிறார் தனுஷ்!

தீபாவளி பண்டிகையின் ரெகுலர் கொண்டாட்டம் களை கட்ட ஆரம்பித்து விட்டது.

அதை விட இந்த ஆண்டு தீபாவளிக்கு தனுஷின் ”கொடி” திரைப்படம் ரிலீஸ் ஆவதால் தனுஷ் ரசிகர்கள் ரெட்டை உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

அவர்கள் உற்சாகத்தை கூடுதலாக்கும் விதமாகவும், ”கொடி” திரைப்படத்தை விளம்பரபடுத்தும் விதமாகவும் வருகிற 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று த்ரிஷா மற்றும் கொடி படக்குழுவினருடன் தனது ரசிகர்களை நேரில் சந்திக்கிறார் தனுஷ்.

கிராஸ் ரூட் பிலிம்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் வழங்கும் திரைப்படம் தான் ”கொடி” .

இப்படத்தில் தனுஷ் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அரசியலை மையமாக கொண்டு உருவாகி உள்ள இப்படத்தை ”எதிர்நீச்சல்” ”காக்கி சட்டை” போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அனைத்து தரப்பினரும் காணும் வகையில் சில தினங்களுக்கு முன்பு சென்சார் குழு ”யு” சான்றிதழ் வழங்கியுள்ள இப்படம் தீபாவளி வெளியீடாக வெளிவர உள்ளது.

இதையொட்டி வருகிற அக்டோபர் 25, 26 ஆகிய தேதிகளில் சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு ”கொடி” திரைப்படத்தை விளம்பரபடுத்த நாயகன் தனுஷ், நாயகி த்ரிஷா, பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜா, நடிகர் காளி வெங்கட் உள்ளிட்ட படக்குழுவினர் செல்கின்றனர்.

ரெட்டிப்பு சந்தோஷம்!

Dhanushdiwali releaseKodiTrisha
Comments (0)
Add Comment