டபுள் ஆகுபன்ஸி- விமர்சனம்

ஒரு உடம்புக்குள் இரு உயிர் என வித்தியாசமான ஒன்லைனோடு வந்துள்ளது டபுள் ஆகுபன்ஸி

கதையின் நாயகன் சந்தோஷ் காலை ஆறு மணிக்கு மேல் ஹீரோயின் ரேஷ்மாவாக மாறிவிடுவார். இருவரும் ஒரே உடலிலிருந்தாலும் இருவரின் வாழ்வும் வித்தியாசமானது. ஒரு தாய் தந்தைக்கு பிறந்த ஒரு உடல் இரு உயிர் கொண்ட இருவருக்கும் வாழ்வில் சில முக்கியமான திருப்பம் நடக்கிறது. அந்த திருப்பத்தை தங்கள் விருப்பத்திற்கேற்ப இருவரால் மாற்ற முடிந்ததா என்பது படத்தின் மீதிக்கதை

கதையின் நாயகனாக இப்படத்தில் அறிமுகமாகியிருக்கும் சந்தோஷ் முதல் படத்திலே கதாநாயகன் அந்தஸுக்கு உயர்ந்துள்ளார். ரேஷ்மா வெங்கடேஷ் அருமையாக நடித்துள்ளார்..சம்யுக்தா காதலை கவர்ச்சி கலந்து தந்துள்ளார்..வினோத் கிஷன் நல்ல நடிப்பை தந்துள்ளார். விடிவி கணேஷ் அவர் வரும் காட்சிகள் எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்கிறார்

சாம்.சி.எஸ் அதியசமாக பாடல்களிலும் கவனம் செலுத்தி நல்ல பாடல்களை கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் தனது பணியை செவ்வனே செய்துள்ளார்

கதையிலே ஒரு க்யூட்னெஸ் இருப்பதால் பாதி கிணற்றை தாண்டிவிட்டார் இயக்குநர் அஸ்வின் கந்தசாமி. திரைக்கதை முன்பாதியில் அவ்வளவு தரமாக இருந்தது. பின்பாதியில் தான் நிறைய சொதப்பல். இருப்பினும் படத்தை ஓரளவு ரசிக்க முடிகிறது
2.75/5

Director Ashwin KandasamyDouble occupancy movie