டிரைவர் ஜமுனா- விமர்சனம்

சாதாரண பழி வாங்கும் கதை என்றாலும் அதைச் சொன்ன விதத்தில் சின்ன ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது டிரைவர் ஜமுனா படம்

குடும்பச்சூழல் கருதி ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகைக் கார் ஓட்டுகிறார். ஈ.சி.ஆரில் மூன்று கூலிப்படை ரவுடிகள் அவரது காரில் ஏறுகிறார்கள். அவர்களின் க்ரைமிற்கு ஒரு பின் கதை இருப்பது போல ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் ஒரு பின் கதை இருக்கிறது. இந்தக் கதைகள் என்ன என்பதும் அடுத்தடுத்து நிகழும் ட்விஸ்ட்களும் தான் டிரைவர் ஜமுனாவின் திரைக்கதை

முழு அர்ப்பணிப்போடு நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். காருக்குள்ளே பெரும்பாலான காட்சிகள். நிறைய க்ளோசப் ஷாட்கள். கச்சிதமாக நடித்துள்ளார்.
ஆடுகளம் நரேன் கேரக்டர் வடிவமும் அவரது நடிப்பும் சிறப்பு. மூன்று கூலிப்படை ரவுடிகளின் நடிப்பிலும் குறையில்லை

இசை அமைப்பாளர் ஜிப்ரான் அவ்வப்போது தொய்வை நோக்கிச் செல்லும் படத்தை தன் பின்னணி இசையால் எனர்ஜியாக்குகிறார். ஒளிப்பதிவாளரின் உழைப்பும் படமெங்கும் பரவியுள்ளது. சேஷிங் காட்சிகளை நன்றாக எடுத்துள்ளார்.

சின்னக் கதை என்பதை உணர்ந்து மிகச்சிக்கனமாக புட்டேஜை கோர்த்துள்ளார் இயக்குநர். இன்னும் சற்று மெனக்கெட்டு சில வேலைகளைச் செய்திருந்தால் ஜமுனாவின் பயணம் இன்னும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கும். இருப்பினும் முழுதும் ஏமாற்றாத ஆறுதலான படம் இது

2.75/5

Actress Aishwarya Rajeshdirector KinslinDriverJamuna movie