டியூட்- விமர்சனம்

தாலி என்ற தமிழர் கல்ச்சரில் சின்னதாக கல் எறிந்துள்ளது டியூட்

பிரதீப் ஒரு காதல் தோல்வியால் துவண்டு திரிகிறார். அவரது தாய்மாமாவான சரத்குமாரின் மகள் மமிதா பைஜு ப்ரதீப் மேல் காதல் கொள்கிறார். பிரதீப் not interested என்கிறார். சில மாதம் கடந்ததும், பிரதீப் மமிதா பைஜுக்கு ஒகே சொல்கிறார்..But அந்த டைம் டுரியேசனில் மமிதா பைஜு வேறோருவரை காதலித்து விடுகிறார். ஆனால் சொந்தங்கள் ப்ரதீப் மமிதாவிற்கு மேரேஜ் செய்வதற்கான வேலைகளைச் செய்துவிடுகின்றனர். அதன்பின் என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை

நூலுக்கேற்ற ஊசியாக இந்தக் கேரக்டருக்குள் பக்காவாக பொருந்திவிடுகிறார் ப்ரதீப் ரங்கநாதன். நடிகராக நல்ல முதிர்ச்சி அவரிடம் தெரிகிறது. நிறைய்ய்ய எமோஷ்னல் காட்சிகளில் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார். பல காட்சிகளில் ப்ரதீப்-ஐ ஓவர்டேக் செய்து நடிப்பில் ஹார்ட்டீன்களை அள்ளுகிறார் மமிதா பைஜு. அப்பா சரத்குமாரோடு ஒரு நடிப்பு, பிரதீப்போடு ஒரு நடிப்பு, தனது காதலனோடு ஒரு நடிப்பு என அசத்தியுள்ளார். சரத்குமாரின் கதாப்பாத்திர வார்ப்பே அட்டகாசமாக எழுதப்பட்டுள்ளது. அவரும் பின்னியெடுத்துள்ளார்.ரோஹினி, ஹீரோவின் நண்பர், மமிதா பைஜுவின் காதலர் ஆகியோரும் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர்

நிகித் பொம்மியின் ஒளிப்பதிவு எக்ஸ்லண்ட். சிறப்பான கிரேடிங் வொர்க்கும் தூள். சாய் அபயங்கர் இசையில் சத்தத்தை அதிகமாக கொடுத்துள்ளார். சில இடங்களில் நல்லிசையும் தென்படுவது ஆறுதல்

ஒரு நிமிட ரீல்ஸ் போல தங்களது எமோஷ்னலை ஷிப்ட் செய்துகொள்ளும் ஜென்ஸி கிட்ஸின் உளவியலைப் பிரதிபலித்து ஹீரோ கேரக்டரை உருவாக்கியுள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். அது படத்தின் கலகல போக்கிற்கு உதவியுள்ளது. மேலும் தாலி செண்டிமெண்ட் பற்றி கீர்த்தீஸ்வரன் உடைத்துள்ள விசயம் வரவேற்கும் படி இருந்தாலும், விமர்சிக்கும் படியும் உள்ளது. ஆணவக்கொலைக்கு எதிராக இவ்ளோ கமர்சியலாக ஒரு படத்தைக் கொடுத்திருப்பது நல்ல முயற்சி. திரைக்கதையாக முன்பாதியில் இருந்த நேர்த்தி பின்பாதியில் இல்லை. இருந்தும் நிச்சயமாக இந்த டியூட்டிற்கு இளசுகள் ஜுட் விடுவார்கள்
2.75/5

Actor Pradeep RanganathanActress mamitha baijuDude movie