எம்புரான்- விமர்சனம்

எப்படி இருக்கிறது லூசிபர் சீக்வெல்?

மலையாள சினிமா எளிமையான கதை சொல்லல் மூலம், உலகை கவனிக்க வைக்கும் படைப்பாளிகள் கொண்ட இண்டஸ்ட்ரி. ஆனால் இந்த எம்புரானை வலிந்து ஒரு உலகப்படமாக்க வேண்டும் என்ற வேட்கையில் எடுத்துள்ளனர்..

கதையைப் பற்றிப் பேசுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. லூசிபர் முதல் பாகத்தில் டொவினோ தாமஸிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு மோகன்லால் செல்வார்..இந்த எம்புரானில் பணத்திற்காக திசைமாறும் டொவினோவையும், சுமந்த் சிங் உள்பட பலரையும் வதம் செய்ய மோகன்லால் வருகிறார்.. இதான் கதை

“வயதானாலும் சிங்கம் சிங்கம் தான்” என்ற வசனத்திற்கேற்ப மோகன்லால் மாஸாக இருக்கிறார். அவருக்கான பில்டப்களிலே அவர் காட்சிகள் கடந்துவிடுகின்றன. பிரித்விராஜ் இயக்குநராக அவருக்கு அவரே கொடுத்துக் கொண்ட கேரக்டரைச் சரியாகச் செய்துள்ளார். டொவினோ தாமஸ் கொடுத்த வேலையைத் திறம்படச் செய்துள்ளார். மஞ்சுவாரியார் நடிப்பும் சிறப்பு. மேலும் ஏனைய கேரக்டர்களும் ஒகே தான்

படத்தில் பரந்து விரிந்த பட்ஜெட்டை ஒளிப்பதிவு துல்லியமாக காட்டியுள்ளது. பிரேமிங் எல்லாமே ஆகத்தரம். இசையும் படத்தை ஒரு பில்டப் மூட்-க்கு கொண்டு செல்கிறது. ஆர்ட் டிப்பார்ட்மெண்ட், எடிட்டிங், வரைகலை, சவுண்ட் எபெக்ட் என தொழில் நுட்ப ரீதியாக எம்புரான் தம்ஸப் காட்ட வைக்கிறார்

ஆனால் கதை திரைக்கதையில் நேர்த்தியே இல்லை. எவ்வளவு பணத்தைச் செட் வொர்க்கிலும், ஆர்டிஸ்ட் சம்பளத்திலும் கொட்டுகிறார்கள். அதற்கு முன் பேப்பர் வொர்க் சரியாக அமைய வேண்டாமா? பிரம்மாண்டம் இருந்தும், அது நன்றாக தெரிந்தும் திரைக்கதையில் வலுவில்லை. மோகன்லால், பிரித்விராஜ், டொவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பிற்காக ஒருமுறைப் பார்க்கலாம்
2.5/5

Actor Mohanlaldirector Prithviraj SukumaranEmpuraan movie