வள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் “குள்ளநரிக்கூட்டம்” வெற்றிப்பட இயக்குனர் ஸ்ரீபாலாஜி இயக்கத்தில், ஸ்ரீ விஜய் இசையில், மிதுன் மகேஷ்வரன், ஸ்ருதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “எங்க காட்டுல மழை”
மிதுன் மகேஷ்வரன், ஸ்ருதி, அருள்தாஸ், சாம்ஸ், அப்புக்குட்டி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீ பாலாஜி இயக்கியிருக்கிறார்.
ஸ்ரீ விஜய் இசையமைக்க, ஏ.ஆர். சூர்யா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்ப்படத்தின் பாடல்களை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார்.
படத்தின் முன்னோட்டத்தை திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர்கள் எழில், சமுத்திரக்கனி, சுசீந்திரன் ஆகியோர் ஜூலை 15ம் (நாளை) தேதி தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்கள்.
படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எங்க காட்டுல மழை படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.