இதயம் முரளி- விமர்சனம்

ஹீரோ அதர்வா சொல்லாமல் விட்ட காதல்களை எப்படி மீண்டும் தொட்டார்? என்பதே கதை. எதே காதல்களா?

அட ஆமாங்க. ஹீரோ அதர்வாவிற்கு முதலில் மிஸ் மீது காதல். கட் செய்தால் மாணவப்பருவத்தில் ப்ரீத்தி முகுந்தன் மீது காதல். அந்தக் காதலை ப்ரீத்தியிடம் சொல்லாமல் தவறவிடுகிறார். அடுத்ததாக அதர்வா இளைஞனாக இருக்கும் போது என்ட்ரி கொடுக்கிறார் கயாடுலோகர். அவரிடம் காதலைச் சொல்லாமல் தனக்குள்ளே வைத்து புழுங்குகிறார் அதர்வா. அட ஏன்பா என படம் பார்க்கும் நாமே கேள்வி கேட்கும் அளவிற்கு அவரது சொல்லாத காதல்கள் வளர்ந்துகொண்டே செல்ல, இதுக்கு என்னதான் என்டு? என்பதை நோக்கிய பயணமே மீதிப்படம்

அளவெடுத்த சட்டையாட்டம் இந்தக் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் அதர்வா. காதல் காட்சிகளில் பின்னுகிறார். கயாடு லோகரா, ப்ளாஸ்டு ப்ரீத்தி முகுந்தனா என பாப்பையாவை வைத்து பட்டிமன்றம் நடத்தவேண்டும் போல. இருவரும் அழகிலும் நடிப்பிலும் மிளர்கின்றனர். கேமியோ ரோலில் வரும் பகத்பாசில் ஒரு பாசிட்டிவ் வைப் தருகிறார். பரிதாபங்கள் சுதாகர் டிராவிட் இருவருமே பின்னுகிறார்கள். நட்டி கேரக்டரும் அவரது நடிப்பும் நச்

ஒளிப்பதிவாளர் செம்மயான விஷுவல்ஸை தந்துள்ளார். ஒளிப்பதிவிற்காகவே படத்தை ஒருமுறை பார்க்கத் தோன்றும். தமனின் இசையில் பாடல்கள் ஜென்ஸி வைப்பிலுள்ளது. பின்னணி இசையும் கச்சிதம். Then தமன் படத்தில் நடித்துமுள்ளார்

அதர்வா ஏன் காதலைச் சொல்ல தயங்குகிறார் என்ற காரணம்
ஏனோ சொல்லப்படவில்லை. அதேபோல் படத்தின் நீளம் ரொம்ப அதிகம். இவையரண்டையும் சரி செய்திருக்கலாம். பக்காவான பல காதல் காட்சிகளால் தியேட்டரில் காதல் மழை பொழிய வைக்கிறார் இந்த இதயம் முரளி

3/5

Actor AtharvaaIdhayam murali movie