ஜிவி பிரகாஷுக்கு இந்தப்படமாவது கை கொடுக்குமா?
வழக்கம் போல பெரிதாக வாழ்வு மீது அக்கறை இல்லாத பையனாக சுற்றுகிறார் ஜிவி பிரகாஷ். பிரிண்டிங் பிரஸில் வேலை செய்யும் அவருக்கு தங்குவதற்கு வீடு தேவைப்படுகிறது. யாரென்றே தெரியாத கயாடுலோஹர் தன் வீட்டில் தங்குவதற்கு ஜிவியை அழைக்கிறார். “ஆஹா பொண்ணு மாட்டிக்கிச்சு” என்று ஜிவி மகிழும் போது கதையில் ஒரு ட்விஸ்ட்! அதாவது மாட்டியது கயாடுலோஹர் அல்ல. ஜிவி! ஏன் ஏன் ஏன்? என்பதற்கு மீதிப்படம் பதில் சொல்கிறது
நடிகராக ஜிவி பிரகாஷ் கொடுத்த வேலையைச் சரியாகவே செய்துள்ளார். கயாடு லோஹரிடமிருந்து கவர்ச்சியைத் தாண்டி ஆச்சர்யப்படும் படி நல்ல நடிப்பு இப்படத்தில் வெளிப்பட்டுள்ளது. கார்த்திக் சீனிவாசன் தனக்கு கிடைத்த நல்ல கேரக்டரை சிறப்பாகச் செய்துள்ளார். ஆதித்யா கதிர், மாறன் உள்ளிட்டவர்களுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை
அருண் ராதாகிருஷ்ணன் மிகச்சிறப்பாக ஒளிப்பதிவைச் செய்துள்ளார். ஒரு வீட்டுக்குள்ளே நடக்கும் கதையில் கூடுமான வரை வித்தியாச ஷாட்களை வைத்துள்ளார். சாம். சி..எஸ் நல்ல பின்னணி இசையைக் கொடுத்துள்ளார். வழக்கம் போல சில இடங்களில் இரைச்சல் அதிகம்
முதல்பாதியில் படம் இயல்பாக பயணித்து நல்ல ட்விஸ்டோடு இன்டர்வெல் வருகிறது. ஆனால் பின்பாதியில் வரும் எல்லாக் கிளைக்கதைகளும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமையவில்லை. க்ளைமாக்ஸ் எப்படியாவது முடிக்க வேண்டும் என முடித்தது மைனஸ்! சூப்பராகவும் இல்லாமல் சுமாராகவும் இல்லாமல் கரை சேர்கிறது இம்மார்டல்
2.75/5