ஜப்பான்- விமர்சனம்

கார்த்தி ராஜுமுருகன் அரைத்தூக்கத்தில் செய்த சம்பவம் ஜப்பான்

இண்டியா மேட் ஆன ஜப்பான் ஒரு மாபெரும் கொள்ளைக்காரன். எய்ட்ஸ் நோயோடு திரியும் அந்த ஜப்பான் மேல் செய்யாத கொள்ளைக் குற்றம் ஒன்று வருகிறது. அதன்பின்னால் இருக்கும் அரசியல் விளையாட்டை ஜப்பான் எப்படி சித்து விளையாட்டால் கையாள்கிறான் என்பதே கதை

அலட்டிக்கொள்ளாமல் இடது கையால் டீல் பண்ணும் கேரக்டர் என்பதால் கார்த்தி ஈஸியாக நடித்துள்ளார். ஆனாலும் அவரது கோமாளித்தனமான பல காமெடி காட்சிகள் எடுபடவில்லை. அனு இம்மானுவேலை எதற்கு படத்திற்குள் கொண்டு வந்தார்கள் என்ற கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது இன்னும். தெலுங்கு நடிகர் சுனில் கேரக்டரும், பரிதாபகரமான இன்னொரு இளைஞர் கேரக்டரும் ஓரளவு எழுத்தப்பட்டுள்ளது. அவர்களிருவரும் நன்றாக நடித்துள்ளனர்

ரவிவர்மனின் ஒளிப்பதிவு லோகேஷ், நெல்சன் படங்களின் லைட்டிங்-ஐ நினைவுப்படுத்தியது. படம் தராத எபெக்டை கேமரா தந்தாலும் பிரயோசனம் இல்லை தானே?! ஜிவி முடிந்த மட்டும் நல்லிசை வழங்க முயற்சித்துள்ளார். பாடல்கள் பரவாயில்லை. RR நிறைவேயில்லை

ராஜுமுருகன் வசனங்கள் எப்போதுமே தனித்துவமிக்கது. இதில் ஓரிரண்டு வசனங்களைத் தவிர எதுவும் ஈர்ப்பில்லை. பெண்களை இழிவுப்படுத்தும் சில வசனங்களும் அதிர்ச்சியைத் தந்தது. எழுத்திலும் இயக்கத்திலும் துளியும் நேர்த்தியில்லாத இந்த ஜப்பான் முன்பாதி குறைவாய் சோதிக்கிறது. பின்பாதியில் ரொம்பவே சோதிக்கிறது
2/5

actor karthidirector rajumuruganjapan