ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ : கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த சூர்யா

காத்திருந்து எண்ட்ரி கொடுத்தாலும் அந்த எண்ட்ரி சிறப்பாக அமைய வேண்டும்.

அந்த வகையில் திருமணத்துக்குப் பிறகு இரண்டு வருடங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகாவை ’36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்க வைத்தார் சூர்யா.

மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து ஜோதிகாவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு நேற்று பதில் கிடைத்தது.

ஆமாம், மீண்டும் தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா நடிக்க சூர்யா தயாரிக்கும் படத்துக்கு “மகளிர் மட்டும் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். தேசிய விருது பெற்ற “குற்றம் கடிதல்’’ படத்தை தொடர்ந்து இயக்குநர் பிரம்மா இயக்கும் இப்படத்தில் நடிகை ஊர்வசி, பானுப்ரியா, மற்றும் சரண்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

ஜோதிகா இப்படத்தில் ஒரு ஆவணப்பட இயக்குநராக நடிக்கிறார். நாசர் மற்றும் லிவிங்ஸ்டன் நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது.

மேலும் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் தனது ராஜ்கமல் நிறுவனம் சார்பில் ‘மகளிர் மட்டும்’ படத்தை 1994 ஆம் ஆண்டு தயாரித்தார் நடிகர் கமல்ஹாசன். அந்த டைட்டிலை ஜோதிகா நடிக்கும் இந்தப் படத்துக்கு கொடுத்து உதவியதற்காக கமலுக்கு ஸ்பெஷல் நன்றியும் தெரிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா.

JyotikaKamal HaasanMagalir MattumSuriya
Comments (0)
Add Comment