டாஸ்மாக் சீன்களே இல்லை! : அட நம்புங்க இது டைரக்டர் ராஜேஷ் படமுங்க!

மிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவிக்கப்படாத விளம்பரத் தூதர் போல முழுமையாக மாறி விட்டிருந்தார் இயக்குநர் ராஜேஷ்.

அவர் இதுவரை இயக்கிய எல்லாப் படங்களிலும் கதை இருந்ததோ இல்லையோ? ஆனால் கட்டாயமாக டாஸ்மாக் சீன்கள் குவிந்து கிடக்கும்.

அந்தளவுக்கு ஒரு டாஸ்மாக் இயக்குநராக அறியப்பட்ட இயக்குநர் ராஜேஷ் லேட்டஸ்ட்டாக இயக்கி வரும் படம் தான் கடவுள் இருக்கான் குமாரு!

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் காதல் , காமெடி , செண்டிமெண்ட் கலந்த அழகான ஒரு ரோடு பிலிமாக இருக்கும் என்கிறார்.

உங்க படத்தை சிறுவர்கள் ரசிக்க முடியுமா? என்றால் கண்டிப்பாக இந்தப் படத்தை சிறுவர்கள் ரசிக்க முடியும் என்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

அதெப்படி சாத்தியம்? கேட்டால் அணுகுண்டை தூக்கிப் போடுகிறார்…

வழக்கமா என்னோட படங்கள்ல இருக்கிற டாஸ்மாக் காட்சிகள் எதுவுமே இந்தப் படத்துல இருக்காது. அதேமாதிரி என்னோட முந்தின படங்கள் மாதிரி இந்தப் படமும் ”யு” சான்றிதழ் படமாக இருக்கும் என்றார்.

மாற்றம் நல்லது!!

G.V. Prakash KumarKadavul Irukan KumaruKadavul Irukan Kumaru Movie NewsNikki GalraniTasmac
Comments (0)
Add Comment